அந்நாள் தொடங்கி இந்நாள்வரை அவனின்றி எதுவுமே நடப்பதில்லை எம்பொருளாகி எமக்கு அருள்புரியும் செம்பொருளாகிய சிவமே சிவமே ஒருநிலை இதுவே உயர்நிலை எனுமொரு திருநிலை மேவிய சிவமே சிவமே மெய்வைத்து அழியா பெருவெளி நடுவுரு தெய்வபதியாம் சிவமே சிவமே குறைதவிர்த்து யெனக்கே பொன்முடி சூட்டி சிறமுர நாட்டிய சிவமே சிவமே
WELCOME TO EZHILAGAM WEBSITE (மாதேஸ் வலைதலத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் ) பூவின் மலர்ச்சியும் பெண்களின் மகிழ்ச்சியும் மனதிற்கு எப்பொழுதும் இதமாக இருக்கும்.

Monday, 13 November 2017

மனைவியின் கனவுகள்மணம் முடித்து அச்சத்தோடு நான் அவன் விரல் நுனி பிடிக்கும் பொழுது என் கை அவன் இருக்க பற்றி அவன் பார்வையிலேயே சிறு அணைப்பு வேண்டும் . அவனின் முதல் ஸ்பரிசம் என் வெட்கத்தை எனக்கே அறிமுகம் செய்ய வேண்டும் . கண் கலங்கி ஜன்னலோரமாய் எட்டி பார்த்து என் வீட்டு முற்றத்தோடு நான் விடை பெரும் பொழுது என் தோல் அணைத்து அவன் கூறும் ஆறுதல் வேண்டும் . அவன் வீட்டார் உடன் எனக்கு இருக்கும் சிறு தயக்கத்தினை என்னில் இருந்து அவன் விலக்கிட வேண்டும் . அவனை எதிர் பார்த்து நான் காத்திருக்கும் தருணத்தில் எதிர் பாராமல் பின்னிருந்து என்னை அவன் அணைத்திட வேண்டும் . அவன் சீண்டும் சீண்டல்கலில் என் முகம் சிவந்திட வேண்டும் அதை மறைக்க நான் பொய்யாய் அவனிடம் கோபம் காட்ட அதை அவன் ரசித்திட வேண்டும் . அவன் என்னுடன் இல்லதாத நேரத்திலும் எனக்கு துணையாக அவனின் குருஞ்செய்தி வேண்டும் . அவனோடு நான் பேசும் தொலைபேசி அழைப்புகள் முத்த சத்தத்தோடு முடிந்திட வேண்டும் . சிறு சிறு ஊடல் அவனுடன் வேண்டும் ஆனால் அடுத்த நொடியே கூடலும் அதற்காக அவன் செய்யும் கெஞ்சலும் கொஞ்சலும் வேண்டும் . அவன் நெஞ்சில் சாய்ந்து என் ஆசைகள் நான் கூற வேண்டும் அதில் ஐந்து ஆறு அவன் நிறைவேற்றிட வேண்டும் . தினமும் அதிகாலை வேளையில் குழந்தை போல் உறங்கிடும் அவன் முகம் கண்டே நான் எழ வெண்டும் . மொட்டை மாடி மழையில் நான் நனைந்திட செல்லமாய் என்னை அவன் அதட்டிட வேண்டும் . மழலையாய் மாறி நான் சினுங்கும் சினுங்களில் அவனின் பொய் கோபம் கலைந்து அவனும் என்னுடன் சேர்ந்து நனைந்திட வேண்டும் . அவனுடன் மிதி வண்டியில் முன் அமர்ந்து அவன் நெஞ்சுரச ஒரு நீண்ட தூர பயணம் வேண்டும் . அவன் விரல் என் விரல் உரச என் சேலை அவன் தோல் உரச நெருக்கமாய் அவனுடன் சேர்ந்து நான் நடந்திட வேண்டும் . ஜன்னல் ஓர பேருந்து பயணத்தில் அவன் மீது நான் சாய்ந்து அவன் அலைபேசியை எடுத்து அதில் கேண்டி க்ரஷ் விளையாடி அவனை வெறுப்பேற்ற வேண்டும் . அவன் கூறாமலே அவனின் ஆசைகள் அறிந்து அடிக்கடி அவனுக்கு இன்ப அதிர்ச்சிகள் நான் தந்திட வேண்டும் . நான் இன்றி அவன் படும் அவஸ்தைகள் அவன் வாய் கூற கேட்டு நான் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி அன்னை வீடு செல்ல வேண்டும் என்று பொய்யாய் நான் அடம் பிடிக்க வேண்டும் . வாரம் ஒரு முறை அவனுடன் கை கோர்த்து கடற் காற்று வாங்க வேண்டும் . தினமும் இரவில் அவனுடன் இரு சக்கரத்தில் ஒருமுறை வலம் வர வேண்டும் . மாதத்தில் மூன்று நாட்கள் அவன் நெஞ்சில் என்னை தாங்கி என் நெற்றியில் இதழ் பதித்து என்னை உறங்க வைத்திட வேண்டும் . மீதி நாட்களில் அவனை என் மடியில் நான் தாங்கிட வேண்டும் . என் பெண்மையை அவனுக்கு பரிசாக்க வேண்டும் . அவனின் வாரிசை எனக்கு அவன் வழங்கிட வேண்டும் . நரை தோன்றி தோல் சுருங்கிடும் பொழுதிலும் அவனோடு நான் வாழ்ந்திட வேண்டும்

மணம் முடித்து அச்சத்தோடு நான் அவன் விரல் நுனி பிடிக்கும் பொழுது என் கை அவன் இருக்க பற்றி அவன் பார்வையிலேயே சிறு அணைப்பு வேண்டும்
.
அவனின் முதல் ஸ்பரிசம்
என் வெட்கத்தை எனக்கே அறிமுகம் செய்ய வேண்டும்
.
கண் கலங்கி ஜன்னலோரமாய் எட்டி பார்த்து என் வீட்டு முற்றத்தோடு நான் விடை பெரும் பொழுது என் தோல் அணைத்து அவன் கூறும் ஆறுதல் வேண்டும்
.
அவன் வீட்டார் உடன் எனக்கு இருக்கும் சிறு தயக்கத்தினை என்னில் இருந்து அவன் விலக்கிட வேண்டும்
.
அவனை எதிர் பார்த்து நான் காத்திருக்கும் தருணத்தில் எதிர் பாராமல் பின்னிருந்து என்னை அவன் அணைத்திட வேண்டும் .
அவன் சீண்டும் சீண்டல்கலில் என் முகம் சிவந்திட வேண்டும் அதை மறைக்க நான் பொய்யாய் அவனிடம் கோபம் காட்ட அதை அவன் ரசித்திட வேண்டும்
.
அவன் என்னுடன் இல்லதாத நேரத்திலும் எனக்கு துணையாக அவனின் குருஞ்செய்தி வேண்டும் .
அவனோடு நான் பேசும் தொலைபேசி அழைப்புகள் முத்த சத்தத்தோடு முடிந்திட வேண்டும்
.
சிறு சிறு ஊடல் அவனுடன் வேண்டும் ஆனால் அடுத்த நொடியே கூடலும் அதற்காக அவன் செய்யும் கெஞ்சலும் கொஞ்சலும் வேண்டும்
.
அவன் நெஞ்சில் சாய்ந்து என் ஆசைகள் நான் கூற வேண்டும்
அதில் ஐந்து ஆறு அவன் நிறைவேற்றிட வேண்டும்
.
தினமும் அதிகாலை வேளையில் குழந்தை போல் உறங்கிடும் அவன் முகம் கண்டே நான் எழ வெண்டும் .
மொட்டை மாடி மழையில் நான் நனைந்திட செல்லமாய் என்னை அவன் அதட்டிட வேண்டும்
.
மழலையாய் மாறி நான் சினுங்கும் சினுங்களில் அவனின் பொய் கோபம் கலைந்து அவனும் என்னுடன் சேர்ந்து நனைந்திட வேண்டும்
.
அவனுடன் மிதி வண்டியில் முன் அமர்ந்து அவன் நெஞ்சுரச ஒரு நீண்ட தூர பயணம் வேண்டும்
.
அவன் விரல் என் விரல் உரச என் சேலை அவன் தோல் உரச நெருக்கமாய் அவனுடன் சேர்ந்து நான் நடந்திட வேண்டும்
.
ஜன்னல் ஓர பேருந்து பயணத்தில் அவன் மீது நான் சாய்ந்து அவன் அலைபேசியை எடுத்து அதில் கேண்டி க்ரஷ் விளையாடி அவனை வெறுப்பேற்ற வேண்டும்
.
அவன் கூறாமலே அவனின் ஆசைகள் அறிந்து அடிக்கடி அவனுக்கு இன்ப அதிர்ச்சிகள் நான் தந்திட வேண்டும் .
நான் இன்றி அவன் படும் அவஸ்தைகள் அவன் வாய்
கூற கேட்டு நான் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி அன்னை வீடு செல்ல வேண்டும் என்று பொய்யாய் நான் அடம் பிடிக்க வேண்டும் .
வாரம் ஒரு முறை அவனுடன் கை கோர்த்து கடற் காற்று வாங்க வேண்டும் .
தினமும் இரவில் அவனுடன் இரு சக்கரத்தில் ஒருமுறை வலம் வர வேண்டும் .
மாதத்தில் மூன்று நாட்கள் அவன் நெஞ்சில் என்னை தாங்கி என் நெற்றியில் இதழ் பதித்து என்னை உறங்க வைத்திட வேண்டும்
.
மீதி நாட்களில் அவனை என் மடியில் நான் தாங்கிட வேண்டும்
.
என் பெண்மையை அவனுக்கு பரிசாக்க வேண்டும்
.
அவனின் வாரிசை எனக்கு அவன் வழங்கிட வேண்டும்
.
நரை தோன்றி தோல் சுருங்கிடும் பொழுதிலும் அவனோடு நான் வாழ்ந்திட வேண்டும்

No comments:

Post a Comment